ஆங்கில புத்தாண்டையொட்டி ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணி

திருப்பூர் ரயில் நிலையத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி ரயில் பயணிகளிடம் ரயில்வே போலீசார் சோதனை
திருப்பூரில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரயில் பயணிகள் திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நாளை ஆங்கிலபுத்தாண்டையொட்டி பல்வேறு ஊர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய வரும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ரயில் பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை ரயில்வே போலீசார் சோதனையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Tags

Next Story