இரணியலில் ரயில் நிறுத்தம் - பிரின்ஸ் எம்.எல்.ஏ.வேண்டுகோள்

இரணியலில் ரயில் நிறுத்தம் - பிரின்ஸ் எம்.எல்.ஏ.வேண்டுகோள்
பிரின்ஸ் எம் எல் ஏ
மண்டைக்காடு கோயில் விழாவை முன்னிட்டு இரணியலில் ரயில் நிறுத்தம் வழங்கவேண்டும் என தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு பிரின்ஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

குமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தெற்கு ரயில்வேக்கு அனுப்பிவுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலும் ஒன்று ஆகும். இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் இந்த வருட மாசிக்கொடை திருவிழா மார்ச் 3 முதல் 12 ம் தேதி வரை நடக்கிறது, இதில் லட்சக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக தென் கேரளா கொல்லம் பகுதியிலிருந்து பெண் பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். கொல்லத்திலிருந்து இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் குறிப்பாக திருவிழா காலங்களில் பக்தர்கள் இரண்டு அல்லது மூன்று பேருந்துகளில் பயணம் செய்யும் நிலையினால் கடும் சிரமம் அடைகின்றனர்.

இதற்கு தீர்வாக சிறப்பு ரயில்களை கொல்லத்திலிருந்து நாகர்கோவிலுக்கு இயக்க வேண்டும். கடந்த வருடம் இரணியல் ரயில் நிலையத்தில் ஒருசில ரயில்களுக்கு நிறுத்தங்களை வழங்கியது குறிப்பிடதக்கது. இந்த வருடமும் ரயில்களுக்கு நிறுத்தம் வழங்க வேண்டும். அதிலும் குறிப்பாக திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயிலுக்கு 10 நாட்களுக்கு நிறுத்தம் வழங்க வேண்டும். திருவனந்தபுரம் கோட்டத்தில் (ஆற்றுக்கல் பொங்காலை) திருவிழா நடக்கும்போதெல்லாம், பக்தர்கள் நலனுக்காக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் (அதே திருவனந்தபுரம் கோட்டத்துக்குள்) -தமிழ்நாடு கோவில் திருவிழாக்களிலும் பக்தர்கள் நலன் கருதி இதே வசதியை விரிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story