ரயில் தண்டவாளப்பணி : ஆலம்பாறை சாலை 4 நாட்கள் மூடல்
அறிவிப்பு பலகை
ரயில் தண்டவாளப்பணி நடைபெறுவதால் ஆலம்பாறை சாலை 4 நாட்கள் மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் கால்வாய் கரை வழியாக செல்லும் ஆலம்பாறை சாலை இன்று 10- ம் தேதி முதல் நான்கு நாட்கள் மூடப்படுகிறது. இது தொடர்பாக ரயில்வேத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- 10 - 6 - 2024 காலை 6 மணி முதல் 13 - 6 - 2024 மாலை 6 மணி வரை ரயில்வே டிராக் (தண்டவாளம் அமைத்தல்) பணி நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் சாலை மூடப்படுகிறது. எனவே இவ்வழியே செல்பவர்கள் மாற்று பாதையில் செல்ல வேண்டும் என்று ரயில்வேயால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பார்வதிபுரம் கால்வாய்கரை வழியாக கணியாகுளம், ஆலம்பாறை பகுதிகளுக்கும் பொன் ஜெஸ்லி, அமிர்தா கல்லூரிகள் மற்றும் இறச்சகுளம் செல்வர்கள் மாற்று பாதைகளை பயன்படுத்த வேண்டி உள்ளது.
Next Story