மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை
மழை
கனமழை எச்சரிக்கை காரணமாக மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது, இதற்கிடையே நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் இன்று கடலோர மாவட்டமான விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அனுமந்தை, ஆலப்பாக்கம், கந்தாடு, மண்டவாய், முருக்கேரி ஆகிய பகுதிகளில் காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது, காலை முதலே குளிர் சூழ்நிலை நிலை வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மரக்கானத்தில் தாழ்வான இடங்களிலும் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
Next Story