கோடை உழவிற்கு கைகொடுக்க கீழ்வேளூரில் 7வது நாளாக மழை

கோடை உழவிற்கு கைகொடுக்க கீழ்வேளூரில் 7வது நாளாக மழை

மழை 

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் இன்று  7வது நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை உழவிற்கு ஏற்ற மழை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.            

நாகை மாவட்டம் கீழ்வேளூர். பகுதியில் 5 மாதத்திற்கு பின் கடந்த 6 நாட்களாக மழை பெய்தது.. இன்று 7வது நாளாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் காலை நேரத்தில் கருமேக மூட்டம் ஏற்பட்டது அதைக் தொடர்ந்து கீழ்வேளூர், பகுதியில் ஆங்காங்கே கன மழையும், சில இடங்களில் லே சான மழையும் பெய்தது.கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் வெயில் சுட்டெரிந்தும்,கடந்த சில நாாள்களாக அனல் காற்றும் வீசி வந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 6நாள்களாக காலை நேரத்தில் மேக மூட்டம் காணப்பட்டு மழை பெய்த நிலையில் இன்று காலை 7 வது நாள் கீழ்வேளூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழையும், பல இடங்களில் லேசான மழை தூரல் சிறிது நேரம் மழை பெய்து. 7 வது நாள் மழையில் கீழ்வேளூர் பகுதியில் பெரும்பாலான பகுதியில் கோடை உழவுக்கு தேவையான மழை பெய்துள்ளதால் சாகுபடி பணிக்கு ஏற்றதாக அமைந்துளளதால் இந்த ஆண்டு சாகுபடி பணியை தொடங்கலாம் என்பதால் விவசாயிகள் மழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story