அரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

அரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

மழை 

அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை முதல் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

தர்மபுரி மாவட்டம் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் சில இடங்களில் 99.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் காணப்பட்டு வந்தது.

மேலும் தர்மபுரி மாவட்டம் உட்பட ஒரு சில மாவட்டங்களில் ஜூன் ஒன்று நாளை முதல் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் இன்று மாலை முதலே தர்மபுரி மாவட்டம் அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் இரவு 8 மணி முதல் அரூர் கோட்டப்பட்டி மெனசி உட்பட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

Tags

Next Story