திடீரென பெய்து கனமழை

திடீரென பெய்து கனமழை

மழை (பைல் படம்)

அரசிராமணி பகுதிகளில் திடீரென பெய்த கனமழை ஆங்காங்கே மரங்கள் முறிந்து சேதமடைந்தது.

சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காற்று, இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழையால் அரசிராமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு மரம் ஒன்று உயர் மின்னழுத்த மின்கம்பியின் மீது சாய்ந்ததில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக கன மற்றும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேவூர், அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, மைலம்பட்டி,பாரதி நகர்,, மூலப்பாதை, தண்ணீர்தாசனூர், மோட்டூர், வட்ராம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது, இதனைத் தொடர்ந்து மாலை வேலையில் திடீரென பலத்த காற்று, இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் அரசிராமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு மரம் ஒன்று பலத்த காற்று வீசியதில் உயர் மின்னழுத்த மின் கம்பியின் மீது சாய்ந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு ஆங்காங்கே மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது .

Tags

Next Story