மலைப்பகுதியில் பெய்து வரும் மழை

மலைப்பகுதியில் பெய்து வரும் மழை

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் மிதமான மழையால் குளுமையான சூழல் நிலவுகிறது.


கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் மிதமான மழையால் குளுமையான சூழல் நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழையும் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் காலை முதல் மிதமான வெப்பம் நிலவிய நிலையில் பிற்பகல் வேளையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது, இதனை தொடர்ந்து மாலை வேளையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது, குறிப்பாக அப்சர்வேட்டரி, அண்ணாசாலை,ஏரி சாலை, உகார்தேநகர், பாம்பார்புரம், அண்ணா நகர், கல்லறை மேடு கல்லுக்குழி, செண்பகனூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழையாகவும்,ஒரு சில இடங்களில் சாரல் மழையாகவும் பெய்து வருகின்றது, மழை தொடர்வதால் முக்கிய குடிநீர் ஆதாரங்கள் உயர்ந்து வருவதுடன் மலைப்பகுதி முழுவதும் குளுமையான சுழலும் நிலவி வருகின்றது, அதே போல கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை அடுத்த கட்ட விவசாய பணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என விவசாயிகளும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story