குமரி கோடை வெயில் கொளுத்திய நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை

குமரி கோடை வெயில் கொளுத்திய நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை

கோடை மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பல்வேறு இனங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக தக்கலையில் 45 மில்லி மீட்டர் மழை பதிவு.

குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலையில் மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த. நிலையில் மேற்கு மாவட்ட பகுதியில் மதியத்துக்கு பிறகு இடி- மின்னலுடன் பெய்தது.தக்கலை பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது மழை பெய்ததையடுத்து அங்கு வெப்பம் தணிந்தது.

மார்த்தாண்டம், திங்கள்சந்தை, களியக்கா விளை, திருவட்டார், ஊரம்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதிகளிலும் மழை பெய்தது.களியல்,

சுருளோடு, - இரணியல், கோழிப்போர் விளை, முள்ளங்கினாவிளை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தக்கலையில் அதிகபட்சமாக 45 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Tags

Next Story