ராமநாதபுரத்தில் கொட்டித் தீர்த்த மழை!
ராமநாதபுரத்தில் கடந்த மூன்று மணி நேரத்தில் 100.80 சென்டிமீட்டர் மழை பொழிவு.
ராமநாதபுரம் நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதை தொடர்ந்து பெய்யத் துவங்கிய மழை படிப்படியாக வேகமெடுத்து கனமழையாக தீவிரமடைந்தது. ராமநாதபுரம் நகரில் ஒரு சில இடங்கள், கமுதி, கடலாடி, கீழக்கரை, பரமக்குடி, ராமேஸ்வரம்,ரெகுநாபுரம்,பாம்பன்,மண்டபம் திருப்புல்லாணி, வாலாந்தரவை உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்தது. இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை ராமநாதபுரம் 40 மிமீ, ராமேஸ்வரம் 20 மிமீ, கடலாடி 9 மிமீ, பரமக்குடி, பள்ளமோர்குளம் 6.20 மிமீ, தங்கச்சிமடம் 5.20 மிமீ, முதுகுளத்தூர் 4.30 மிமீ, கமுதி 3.20 மிமீ, பாம்பன் 1.10 மிமீ என 100.80 மிமீ மழை பெய்தது.
Next Story