தொடர்மழை :விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
மாவட்ட ஆட்சியர் சி.பழனி
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (14.11.2023) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சி.பழனி அறிவித்துள்ளார். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை யாரும் நீர், நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய் துறைனர், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Tags
Next Story