ஆத்தூரில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வந்தது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
ஆத்தூர் நரசிங்கபுரம் தென்னங்குடி பாளையம் ராமநாயக்கன்பாளையம், கடம்பூர், பைத்தூர் கூடமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்க்கும் கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
இடி மின்னலுடன் பெய்து வரும் கனமழை காரணமாக நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகம் அருகில்,
சேலம் செல்லும் பிரதான சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதேபோல் ஆத்தூரில் அரசு மருத்துவமனை முன்பு காமராஜர் சாலையில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.