சாலையில் வடியாத மழைநீர்; வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் வடியாத மழைநீர்; வாகன ஓட்டிகள் அவதி

 கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரத்தில் சாலையில் வடியாமல் தேங்கி நிற்கும் மழைநீரால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். 

கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரத்தில் சாலையில் வடியாமல் தேங்கி நிற்கும் மழைநீரால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில் வடியாமல் தேங்கி நிற்கும் மழைநீரால், பகுதிவாசிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சென்னை -கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில், தனியார் பிளைவுட் தொழிற்சாலையை ஒட்டி இணைப்பு சாலை அமைந்துள்ளது.

அப்பகுதி தாழ்வான பகுதி என்பதால், சிறு மழை பெய்தாலும், குளம் போல் இணைப்பு சாலையில் மழைநீர் தேங்குவது வழக்கம். கடும் மழைக்காலத்தில் இணைப்பு சாலை மட்டுமின்றி, தேசிய நெடுஞ்சாலையிலும் மழை வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்படும். பல ஆண்டு காலமாக நீடிக்கும் இந்த பிரச்னைக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தீர்வு காணாமல் இருப்பது, வேதனை அளிப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிராமத்தின் பிரதான கோவிலான ஏகவள்ளி அம்மன் கோவிலுக்கு, மழைக்காலங்களில் செல்ல முடியாத நிலை ஏற்படுவதுடன், அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அவ்வழியாக கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் தினசரி கடும் சவாலை சந்திக்க வேண்டியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துரித நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் மழைநீர் வடிந்து செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story