சாலை பள்ளங்களில் மழைநீர் தேக்கம்: பொதுமக்கள் அவதி

சாலை பள்ளங்களில் மழைநீர் தேக்கம்: பொதுமக்கள் அவதி
சாலை பள்ளங்களில் மழைநீர் தேக்கம்
சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட 6வது வார்டில், பனையூர் பெரியகுப்பம், பனையூர் சின்னக்குப்பம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு, 6வது வார்டில், 2005ம் ஆண்டு தார் சாலை அமைக்கப்பட்டது.

இச்சாலை நாளடைவில் சேதமடைந்து, 8 ஆண்டுகளாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால், நடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து, புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, 6வது வார்டு கவுன்சிலர் வீரராகவன் கூறியதாவது: பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கக்கோரி, துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கலைஞர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்க, ஆவணங்கள் தயார் செய்து அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், தற்போது வரை சாலை அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பேரூராட்சி தேர்தல் நடந்து இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், 6வது வார்டில் எந்தவித மேம்பாட்டு பணிகளும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story