சூறை காற்றுடன் மழை - 200 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்

ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையில் சுமார் 200 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்தன. சேதமடைந்த வாழைமரங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி, வத்திராயிருப்பு குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதில் நத்தம் பட்டி ,கட்டயதேவன்பட்டி குன்னூர், கல்யாணி புரம் துலுக்கப்பட்டி காடனேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறைக்காற்று காரணமாக விற்பனைக்கு தயாராக இருந்த 200 ஏக்கர் வாழை மரங்கள் ஒடிந்தும்,வேரோடு சாய்ந்தும் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக ஒரு லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் ஆய்வு பணிக்கு கூட வரைவில எனவும் வாழை பயிடும் விவசாயிகளுக்கு காப்பீடு வழங்குவதில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story