திடீர் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

திடீர் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

சாரல் மழை 

திண்டுக்கல்லில் கடந்த ஆறு மாதத்துக்கு பின்பு திடீர் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல்லில் தீபாவளிக்கு முன்பிருந்தே மழை இல்லாமல் கடந்த ஆறு மாதமாக வறண்ட வானிலையே நிலவியது. இதனால் வெப்பம் கடுமையாக இருந்து தான் இரவில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.மேலும் காலை 11:00 மணிக்கே வெளியே செல்ல முடியாமலும் 4 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.

கடந்த மூன்று நாட்களாக வெப்பம் ஒரு டிகிரியை தாண்டியதால் பொதுமக்கள் செய்வதறியாது தெரிவித்து வந்தனர். வெப்பம் அதிகரித்ததால் கொடைக்கானல் சிறுமலை உட்பட இடங்களில் தீப்பிடித்து எரிந்தன. இவற்றை அணைக்க முடியாமல் வனத்துறையினர் தொடர்ந்து திணறி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மூன்று மணி அளவில் திடீரென சாரல் மழை இந்த மழை பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தந்தாலும் சிறிதளவு மழையால் வெப்பம் அதிகரித்தது.

Tags

Next Story