திடீரென கொட்டி தீர்த்த கனமழை

திடீரென கொட்டி தீர்த்த கனமழை

மழை

சங்ககிரி சுற்றுவட்டார பகுதியில் திடீரென ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழை பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சங்ககிரி நகர், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ,வைகுந்தம், கத்தேரி தேவூர்.அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, காவேரிப்பட்டி, மோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அக்கினி வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென மாலை வேளையில் பலத்தகாற்று,இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டையில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.மேலும் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவிவருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story