கொட்டி தீர்த்த கனமழை மகிழ்ச்சி அடைந்த மக்கள்
மழை
சேலம் மாவட்டம், சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சங்ககிரி, வைகுந்தம், மகுடஞ்சாவடி, இடங்கணசாலை, கத்தேரி, தேவூர்,அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, காவேரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது இதனைத் தொடர்ந்து இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பரவலாக பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவிவருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.