அரசு பேருந்தில் கொட்டிய மழை நீர்
மழை
மதுரையில் இருந்து கொடைக்கானல் நோக்கி வந்த பேருந்தின் மேற்கூரையில் இருந்து மழை நீர் கொட்டியதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மாலை வேளையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய மிதமான மழையானது பெய்து வருகின்றது, இதனையடுத்து மதுரையில் இருந்து பிற்பகல் வேளையில் கொடைக்கானலை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது.
இந்த பேருந்தின் மேற்கூரை முழுவதும் சேதமடைந்து இருந்ததால் மலைப்பகுதியில் பெய்த மழையால் மேற்கூரையில் இருந்து சிறிய அருவியில் கொட்டுவது போல் மழை தண்ணீர் கொட்டியது,இதனால் பயணிகள் பேருந்தில் நின்றபடி, நனைந்தவாறு பயணம் மேற்கொண்டனர்.
மேலும் ஒரு சிலர் குடைபிடித்தும் பயணம் மேற்கொண்டனர், இதனை மதுரை அரசு போக்குவரத்து கழகம் கவனம் செலுத்தி மலைப்பகுதியில் இயக்கும் பேருந்துகளை தரமான பேருந்துகளாக இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளதும் குறிப்பிட தக்கது.
Next Story