திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய,விடிய மழை

மழை
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அதனால் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை,வேலுர் உட்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.மேலும் தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அதன்படி திருவண்ணாமலையில் நள்ளிரவு முதல் விடியவிடிய பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் செய்யாறு, போளுர், கலசப்பாக்கம்வந்தவாசி, தண்டராம்பட்டு, கீழ்பெண்ணாத்தூர், ஆரணி உட்பட மாவட்டம் விடுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது மாவட்டத்தில்அதிகபட்சமாக வந்தவாசியில் 25 மி. மீ மழை பதிவானது.மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்திருவண்ணாமலை-6போளூர்-5.20, கலசப்பாக்கம் -12 தண்டராம்பட்டு-8.40, ஆரணி 7.40, செய்யாறு 15, கீழ்பெண்ணாத்தூர் 10.20, வெம்பாக்கம்- 9, சேத்துப்பட்டு 12.40.மாவட்டம் முழுவதும் மழை நீடித்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
