நெல்லையில் அவல நிலையில் பயணிகள்
தரையில் அமர்ந்து ரயில் பயணம்
ரயில்களில் கூட்டம் அலைமோதியதால் விடுமுறை முடிந்து சென்னை திரும்பியவர்கள் கடும் நெரிசலுக்கு மத்தியில் பயணம் செய்தனர்.
சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை விஜயதசமி தசரா உள்ளிட்ட பண்டிகை கால விடுமுறை தினங்களுக்காக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சொந்த ஊர் வந்து பண்டிகைகளை கொண்டாடி விட்டு மீண்டும் இன்றைய தினம் பணி செய்யும் பணியிடங்களுக்கு திரும்பினர். சென்னை பெங்களூர் கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் பணி செய்யும் மக்கள் ரயில்கள், பேருந்துகள் மூலம் தங்களது பயணங்களை மேற்கொண்டனர். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ரயில்களில் இடம் பிடிப்பதற்காக நெடுநேரம் காத்திருந்து தங்களது பயணங்களை மேற்கொண்டனர் விடுமுறை தினங்களுக்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களிலும் முன்பதிவு இடங்கள் குறிப்பிட்ட நேரத்திலேயே முடிவடைந்த நிலையில் முன்பதிவு இல்லா பெட்டிகளில் பயணிப்பதற்கு முண்டியடித்துக் கொண்டு பொதுமக்கள் இடங்களைப் பிடித்தனர் .போதிய இருக்கை கிடைக்காததால் நின்று கொண்டும் கழிவறை அருகேயும் படிக்கட்டுகளிலும் அமர்ந்து கொண்டும், பொருட்கள் வைப்பதற்கான இருக்கையிலும் தரையில் அமர்ந்தவாறே தங்களது பயணங்களை மேற்கொண்டனர். நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை செல்லும் அந்தியோதயா முன்பதிவு இல்லா விரைவு ரயிலில் இடம் பிடிப்பதற்காக நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கட்டுங்கடங்காத கூட்டம் அலைமோதியது. நெல்லையிலிருந்தும் நெல்லை வழியாகவும் தசரா மற்றும் விடுமுறை கால சிறப்பு ரயில்கள் இரண்டு இயக்கப்பட்ட சூழலில் அந்த ரயில்களிலும் பொது மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது நெல்லை கன்னியாகுமரி அனந்தபுரி செந்தூர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் முன்பதிவு இல்லா பெட்டியில் இடம் பிடிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்காண இருக்கைகளை பிடித்து பயணங்களை மேற்கொண்டனர் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டாலும் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கூட்டம் குறையாத நிலையே இருந்தது.
Next Story