சாலையில் தேங்கும் மழைநீர் - கால்வாயை சீரமைக்க கோரிக்கை
சாலையில் தேங்கியுள்ள மழை நீர்
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மழைநீர் வெளியேறும் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ராஜாஜி மார்க்கெட் அருகில், பழைய சுண்ணாம்பு மண்டி அருகில், முறையாக கால்வாய் வசதி ஏற்படுத்தவில்லை. இதனால், மழைநீர் குளம்போல் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. மேலும், அப்பகுதியில் மழைநீர் வெளியேற்றுவதற்காக கூடுதலாக அமைக்கப்பட்ட உறிஞ்சு குழிகளையும் மாநகராட்சி ஊழியர்கள் முறையாக பராமரிக்காததால், அப்பகுதியில் தேங்கிய மழைநீர் சகதியாக மாறியுள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்லும் வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மழைநீரில் டெங்குவை பரப்பும் 'ஏடிஸ்' கொசு உருவாகும் சூழல் உள்ளது. எனவே, ரயில்வே சாலையில் மழைநீர் முழுதும் வடியும் வகையில், வடிகால்வாயை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
Tags
Next Story