வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்; பொதுமக்கள் அவதி

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்; பொதுமக்கள் அவதி

 சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்மழை காரணமாக, வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்மழை காரணமாக, வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் லேசான முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் மலைப்பகுதி அடிவாரப் பகுதியிலான புளியங்குடி, சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையினால் நீர் பெருக்கெடுத்து குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து ஓடைகள் மூலமாக சங்கரன்கோவில் வந்து அடைகிறது, இதனால் சங்கரன்கோவிலில் உள்ள கண்மாய் முழு கொள்ளவை எட்டி மருகால்பாய்ந்து வருவதால் பாட்டத்தூர் தளவாய்புரம் கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது, இதனால் குடியிருப்பு வாசிகள் தங்களது வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகம் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களை பார்வையிட்டு தண்ணீர் வடிந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story