வீடுகளை சூழ்ந்த மழைநீர் - பொதுமக்கள் அவதி

வீடுகளை சூழ்ந்த மழைநீர் - பொதுமக்கள் அவதி
வீடுகளில் சூழ்ந்த மழைநீரால் நோய் பரவும் அச்சம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காட்டு உடைகுளம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் தற்போது பெய்த வரும் தொடர் மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் உள்ள கண்மாய் குளங்கள் நிரம்பிவரும் நிலையில் உடைக்குளம் குடியிருப்பு பகுதியில் உள்ள இரண்டு கண்மாய்களிலும் தண்ணீர் நிரம்பி உள்ளது. மேலும் கண்மாயிலுள்ள இரண்டு மடைகளை சரி செய்யபடாத நிலையில் தண்ணீர் அனைத்தும் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்றுள்ளதால் முழங்கால் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது, இதனால் இப்பகுதி மக்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுகிறது. மேலும் சரும நோய்களும் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று வரும் ஒரு அவல சூழ்நிலையும் உருவாகி உள்ளது. இது குறித்து கடந்த 5 வருடங்களாக மேலாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருடம், வருடம் மழை காலங்களில் மழை பெய்தால் மழை நீர் வீட்டை சூழ்ந்து கொண்டு விஷ பூச்சிகளும் வீட்டிற்க்குள் வந்து விடுவதாகவும் அச்சத்துடன் வாழ்ந்து வரும் ஒரு நிலை உருவாகி உள்ளதாகவும் இதற்கு தற்போது இருக்கும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story