நாமக்கல் : கருமலை முருகனுக்கு ராஜ அலங்காரம்

நாமக்கல்  : கருமலை முருகனுக்கு ராஜ அலங்காரம்

சிறப்பு அலங்காரம்

நாமக்கல் மாவட்டம், கருமலை முருகன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள கருமலை தண்டாயுதபாணி கோவிலில் முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையானா இன்று காலை பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தை மாத கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. செவ்வாய்கிழமை முருகனை வழிபட ஆரோக்கியம் மேம்படும், கடன்கள் தீரும். முருகனை வழிபட வீடு, நிலம் வாங்க நேரம் கூடி வரும். செவ்வாய்க்கிழமை அன்று முருகனை தரிசிப்பது சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story