ராஜா தேசிங்கு பிறந்தநாள் விழா : அமைச்சர் பங்கேற்பு
மேல்மலையனூர் அருகே ராஜா தேசிங்கு பிறந்தநாள் விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்றார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை ஆண்ட மாவீரன் ராஜா தேசிங்கின் 332-வது பிறந்தநாள் விழா மேல்மலையனூர் ஒன்றியத்துக்குட்பட்ட கடலி ஊராட்சியில் நடைபெற்றது. இதற்கு ராஜ்புத்பொந்தில் சமுதாயத்தின் தலைவர் பவானி சிங் தலைமை தாங்கினார். மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சாந்தி சுப்பிரமணியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு ராஜா தேசிங்கின் உருவப்படத்திற்கும், அவர் உயிர் நீத்த இடத்திலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜய குமார், கவுன்சிலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், துணை தலைவர் முபினாயூசப் அலி, தமிழ்நாடு ராஜ்புத்பொந்தில் சங்க மாநில பொதுச்செயலாளர் பிரகாஷ், துணை தலைவர் விஜயகுமார், பொருளாளர் பாலாஜி, உதவி செயலாளர் ராஜேந்தர், இளைஞரணி துணை அமைப்பாளர் பிரசன்னா, தென் சென்னை மாவட்ட துணை தலைவர் மஞ்சுநாத், இணை செயலாளர் கணேஷ் மற்றும் நிர்வாகிகள் சரவணன், சம்பத், தோப்பு சம்பத், ரகுராமன், வாசு, அய்யா துரை, குமார் உள்பட பலர் கலந்து கொண்டுராஜா தேசிங்கு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.