ராஜகோபாலபுரம் மங்கம்மாள் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை

ராஜகோபாலபுரம் மங்கம்மாள் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை

கொள்ளை

வீரகனூர் ராஜகோபாலபுரம் மங்கம்மாள் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை-கொள்ளையர்களை கண்டறிந்து உண்டியல் பணத்தை மீட்டு கொடுக்க கோவில் நிர்வாகம் கோரிக்கை.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வீரகனூர் ராஜகோபாலபுரம் மங்கம்மாள் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை-கொள்ளையர்களை கண்டறிந்து உண்டியல் பணத்தை மீட்டு கொடுக்க கோவில் நிர்வாகம் கோரிக்கை.சேலம் மாவட்டம் வீரகனூர் அடுத்த ராஜகோபாலம் புறம் கிராமத்தில் அமைந்துள்ளது மங்கம்மாள் கோவில். இந்த கோவிலில் நிரஞ்சன் என்பவர் பூசாரியாக இருக்கிறார். வழக்கம்போல இன்று காலை அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்காக கதவை திறந்த நிரஞ்சன், அங்கே கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு ஊர் பெரியவரிடம் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த ஊர் மக்கள் அங்கு சென்று பார்த்தபொழுது, மர்ம நபர்கள் கடப்பாரையால் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் எடுத்து கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே கோவிலில் வெள்ளி கவசம், பித்தளை மணி, அம்மன் கழுத்தில் அணிந்திருந்த மாங்கல்யம் உள்ளிட்ட பொருட்களை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கோவில் தர்மகர்த்தாவான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுப்புராஜ் வீரகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.வீரகனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே, திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இருசக்கர வாகனங்கள் திருட்டு கடைகளை உடைத்து கல்லாப்பெட்டி பணம் திருட்டு திருவிழா சமயங்களில் பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலிப் பறிப்பு விவசாயிகளின் கிணற்றில் இருந்த மின் மோட்டார்கள் மின் வயர்கள் கால்நடைகள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வகையான திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், காவல்துறையினர் எள்முனை அளவு கூட அக்கறை எடுத்து இவற்றை கண்டுபிடித்து தருவதில்லை என்றும் பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். ஆகவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வீரனூர் காவல் நிலையத்தின் மீது தனி கவனம் செலுத்தி, குற்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் காவலர்களை தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story