ராஜாக்கமங்கலம், தென்பாற் கடற்கரையில் அகிலத்திரட்டு பெருவிழா

ராஜாக்கமங்கலம், தென்பாற் கடற்கரையில் அகிலத்திரட்டு பெருவிழா

ராஜாக்கமங்கலம் தென்பாற்கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் தவவனத்தில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு அகிலத்திரட்டு பெருவிழா நடந்தது.


ராஜாக்கமங்கலம் தென்பாற்கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் தவவனத்தில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு அகிலத்திரட்டு பெருவிழா நடந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் தென்பாற்கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் தவவனத்தில் ஆண்டுதோறும் சித்திரை பௌர்ணமி அன்று அகிலத்திரட்டு பெருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நடந்தது. விழாவுக்கு ஐயா வழி சமய தலைவர் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார். தவவனம் நிர்வாகி பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி முன்னிலை வகித்தார்.

விழாவை ஒட்டி பிள்ளையார்புரம் அய்யா வைகுண்டர் தாங்கலிலிருந்து அய்யாவின் அகிலத்திரட்டு அம்மானை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு பணிவிடைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து தவவனத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அதிபன் போஸ் அவர்கள் கலந்துகொண்டு ராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி. செல்வகுமார், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் ,ஓய்வு பெற்ற பேராசிரியை ஸ்ரீ ரங்கநாயகி ,தவவன மேலாளர் பி.டி.ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நாஞ்சில் பா. ஜீவா அவர்கள் அய்யா வழியும் அகிலத்திரட்டு ஆகம நூலின் கருத்துக்களை பற்றி பேசினார் .

தொடர்ந்து அய்யாவழி இசை பாடகர் இளையபெருமாள் அவர்கள் அய்யா வழி பற்றி உரையாற்றினார். பின்னர் இன்னிசை கச்சேரியும் அன்னதர்மங்களும் நடந்தது .நிகழ்ச்சியில் சாந்தா சுவாமிகள் ,சுதா சுவாமிகள் மற்றும் அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story