ராஜபாளையம் : வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு

ராஜபாளையம் : வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
 ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார்.

இராஜபாளையம் நகராட்சி பழைய பேருந்து நிலையம் முழுவதுமாக இடிக்கப்பட்டு ரூ.2.90 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படும் வரும் பணிகளையும் , அம்ரூத் திட்டத்தின் கீழ் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வழங்குவதற்காக ரூ.200.06 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருவதையும் மற்றும் நீரேற்றும் நிலையத்தினையும், அம்ரூத் திட்டம்- பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் ரூ.251.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பிரதான கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய நுண் உர செயலாக்க மையத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

பின்னர், இராஜபாளையம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் த.எஸ்.தங்கபாண்டியன் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், நகராட்சி திட்டப்பணிகள், நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story