ராஜபாளையம் : கொட்டி தீர்த்த கோடை மழை - மக்கள் மகிழ்ச்சி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கோடை வெயில் 105 டிகிரிக்கு மேல வாட்டி வதக்கி வந்த நிலையில் பொதுமக்கள் கோடை வெயில் தாக்கம் தாங்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு மேலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக வானம் மேகமூட்டத்துடன் கோடை மழை பெய்தும் வந்த நிலையில் மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று இளைப்பாரி வந்தனர்.
இந்த நிலையில் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளான தளவாய்புரம், செட்டியார்பட்டி ,முகவூர் ,சேத்தூர், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் ,தேவதானம் ,ஆகிய பகுதிகளில் திடீரென வானில் கருமேகங்கள் சூழப்பட்டு லேசான சாரல் மழையாக தொடங்கியது. சாரல் மழையாக தொடங்கிய கோடை மழையாணது திடீரென இடி மின்னல் சத்தத்துடன் பலத்த மழையாக மழையாக உருவெடுத்து சுமார் 2மணி நேரத்திற்க்கு மேலாக கொட்டி தீர்த்தது.
கோடை வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிக்குள்ளாகி வந்த பொதுமக்கள் கடந்த நான்கு தினங்களாக மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் சாரல் மழையாக பெய்து வந்த நிலையில் நேற்று இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கோடை மழையினால் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்