கிருஷ்ணகிரி மாவட்ட பாமக செயலாளராக ராஜசேகர் நியமனம்
பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் கவுரவ தலைவர் ஜிகே. மணி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய மாவட்ட செயலாளராக, பெரிய கொட்டகுளம் பஞ்.,சேர்ந்த ராஜசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஊத்தங்கரை, பர்கூர் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்டது. புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜசேகர், வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க., கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். வன்னியர் சங்க ஒன்றிய இளைஞரணி செயலாளர், பா.ம.க., ஒன்றிய இளைஞரணி செயலாளர், ஒன்றிய துணை செயலாளர், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர், மாவட்ட கொள்கைபரப்பு தலைவர், ஒன்றிய தலைவர், அரூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர், கட்சியின் ஒன்றிய செயலாளர், ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர், தற்போது ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார். இவருக்கு கட்சி பிரமுகர்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.