புதுச்சத்திரத்தில் ராஜேஷ்குமார் எம்.பி வாக்கு சேகரிப்பு !

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், பாச்சல் பகுதியில் திமுக தலைமையிலான இந்திய கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேற்றி வேட்பாளர் V.S.மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்து பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம், கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

வாக்குசேகரிப்பில் மக்கள் போற்றும் மூன்றாண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும், மக்கள் நலத்திட்டங்களை எடுத்துரைத்து உரையாற்றினர்.

உடன் புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்பி.கௌதம், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story