விபத்து இல்லா புத்தாண்டு கொண்டாட ராஜேஷ்கண்ணன் எஸ்.பி அறிவுறுத்தல்

விபத்து இல்லா புத்தாண்டு கொண்டாட ராஜேஷ்கண்ணன் எஸ்.பி அறிவுறுத்தல்

பாதுகாப்பான மற்றும் விபத்து இல்லாத வகையில் புத்தாண்டு கொண்டாட ராஜேஷ்கண்ணன் எஸ்.பி அறிவுறுத்தல்

பாதுகாப்பான மற்றும் விபத்து இல்லாத வகையில் புத்தாண்டு கொண்டாட ராஜேஷ்கண்ணன் எஸ்.பி அறிவுறுத்தல்

பாதுகாப்பான மற்றும் விபத்து இல்லாத வகையில் புத்தாண்டு கொண்டாட வேண்டும் என நாமக்கல் மாவட்ட எஸ்.பி ராஜேஷ்கண்ணன் அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் ?நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பாதுகாப்பான மற்றும் விபத்து இல்லாத வகையில் புத்தாண்டு கொண்டாடுவதற்காக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் மற்றும் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆகியோரின் அறிவுரைப்படி, நாமக்கல் கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி இளைஞா்கள், பொதுமக்கள் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

வழிபாட்டு தலங்களில் புத்தாண்டு தின சிறப்பு பிரார்த்தனைகள் கலந்து கொள்ளும் போது பாதுகாப்பான முறையில் தங்களது உடைமைகளை வைத்துக் கொள்ள வேண்டும், இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அனைவரும் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும், இவ்வாண்டு விபத்து இல்லாத ஆண்டாக அமையும் வண்ணம் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், பொது போக்குவரத்து மற்றும் பொதுமக்க இடங்களுக்கு செல்பவர்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்,

சாலைகள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் புத்தாண்டு தினத்தை கொண்டாட வேண்டும், அவ்வாறு தவறும் பட்சத்தில் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது உரிய அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும், ஹோட்டல் மற்றும் வணிக நிறுவனங்களில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story