ரஜினிகாந்த் பிறந்தநாள்; ரசிகர்கள் அன்னதானம்

நடிகர் ரஜினிகாந்த்தின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு ராசிபுரம் பகுதி ரசிகர்கள் அன்னதானம் செய்தனர்.
இராசிபுரம் பகுதியில் நடிகர் ரஜினிகாந்த்தின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு, ராசிபுரம் அணைக்கும் கரங்கள் முதியோர் மற்றும் குழந்தைகள், இல்லத்தில் காலை உணவு வழங்கி கேக் வெட்டிக் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் .. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ஆண்டுதோறும் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளில், அவரது ரசிகர்கள் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கியும், ஆலயங்களில் வழிபாடு செய்தும், கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்வது வழக்கம். அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் நகர செயலாளர் வழக்கறிஞர் சிவசக்திவேல் தலைமையில், நடிகர் ரஜினிகாந்தின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு, ராசிபுரம் அணைக்கும் கரங்கள் முதியோர்கள் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து, 150 க்கும் மேற்பட்ட முதியோர், குழந்தைகளுக்கு அறுசுவை உணவாக வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், கேசரி, வடை உள்ளிட்ட காலை உணவு வழங்கப்பட்டது. உணவு பெற்று கொண்ட அங்குள்ள அனைவரும் ரஜினிகாந்த் அவர்கள் நீடூடி வாழ பிரார்த்தனை செய்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் ராசிபுரம் ஸ்ரீ அங்காளம்மன் மற்றும் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் ஆகிய கோவில்களில் ரஜினிகாந்த் அவர்களின் பெயருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். இதில், ராசிபுரம் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சாம், மாதேஸ், நித்தி, ராஜா (எ) யோகராஜன், வினோத், தமிழ், கார்த்தி, மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story