ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராசிபுரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் பி.முத்துசாமி தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணித் தலைவர் என்.சித்ரா, மாவட்டத் துணைத் தலைவர் சி.வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி ஆகியோர் பங்கேற்று சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியினர், தொகுதி பொறுப்பாளர்கள், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு கட்சியினர் ஒய்வின்றி பணியாற்றி தமிழகத்தில் இருந்து அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பும் வகையில் தேர்தல் பணி இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசினர். இதனை தொடர்ந்து சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

இதில் கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவினாயகம் பங்கேற்று நாடாளுமன்ற தேர்தலில் எப்படி வெற்றிக்கு பணியாற்றுவது என்பது குறித்து பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கிப் பேசினார். இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி, மேற்கு மாவட்டத் தலைவர் எம்.ராஜேஸ்குமார், மாவட்டத் துணைத் தலைவர்கள் என்.சுகன்யா, ஆர்.டி.இளங்கோ, பொதுச்செயலர் வி.சேதுராமன், சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story