ராசிபுரம் எஸ்.ஆர்.வி இன்னோவேட்டிவ் பள்ளி சாதனை

ராசிபுரம் எஸ்.ஆர்.வி இன்னோவேட்டிவ் பள்ளி சாதனை
எஸ் ஆர் வி பள்ளி சாதனை
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தேர்வில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி இன்னோவேட்டிவ் பள்ளி சாதனை படைத்தது.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எஸ்.ஆர்.வி இன்னோவேட்டிவ் பள்ளி மாணவ மாணவியர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி இன்னோவேட்டிவ் பள்ளி மாணவி எம்.டி.நேகா 500-க்கு 481 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்றுள்ளார். அவரது பாடவாரியாக விவரம் வருமாறு; ஆங்கிலம் - 95, இயற்பியல் - 95, வேதியியல் - 95, உயிரியல் -100, உடற்கல்வி - 94 . இப்பள்ளி மாணவர் எல்.இளவரசன் 473 மதிப்பெண்களைப் பெற்றார்.

அவரது பாடவாரியான் மதிப்பெண்கள்: ஆங்கிலம் - 86, இயற்பியல் - 96, வேதியியல் - 95, கணிதம் -100, கணினி அறிவியல் - 96 இப்பள்ளி மாணவி கே.ஜி. மித்ராஸ்ரீ 472 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இவரது பாடவாரி மதிப்பெண்கள்: ஆங்கிலம் - 90, இயற்பியல் - 95, வேதியியல் - 95, கணிதம் - 95, உயிரியல் - 97. பள்ளியில் 470 க்கு மேல் 3 மாணவ, மாணவியர்களும், 460 க்கு மேல் 10 மாணவ – மாணவியர்களும், 400 க்கு மேல் 63 மாணவ – மாணவியர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். உயிரியலில் 3 மாணவர்களும், கணிதத்தில் 1 மாணவரும், 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: இதே போல் சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் பள்ளி மாணவ மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பள்ளி மாணவியர் கே.எம்.ருஷ்மிதா, எஸ்..தீக்ஷயாஸ்ரீ ஆகிய இருவரும் 500-க்கு 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவி டி.வி.மிர்தனா 489 மதிப்பெண்களும், மாணவி எம்.ஏ.கீர்த்தி 488 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். பள்ளியில் 490 க்கு மேல் 2 மாணவ – மாணவியர்களும், 480 க்கு மேல் 5 மாணவ – மாணவியர்களும், 470 க்கு மேல் 9 மாணவ – மாணவியர்களும், 450 க்கு மேல் 12 மாணவ – மாணவியர்களும், 400 க்கு மேல் 63 மாணவ – மாணவியர்களும் மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை புரிந்துள்ளனர். தமிழில்10 மாணவர்களும், ஆங்கிலத்தில் 1 மாணவரும், கணிதத்தில் 2 மாணவரும் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

அதிக மதிப்பெண்களைப் பெற்றமாணவ மாணவியர்களைப் பள்ளியின் தலைவர் ஏ.ராமசாமி, செயலாளர் எஸ்.செல்வராஜன், பொருளாளர் பி.சுவாமிநாதன், மேனேஜிங் டிரஸ்டி ஏ.ஆர்.துரைசாமி, துணைத்தலைவர் எம்.குமரவேல், இணைச் செயலாளர் சத்தியமூர்த்தி, பள்ளி முதல்வர் டி.ஆர்த்தி உள்ளிட்ட ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினர்.

Tags

Next Story