ராஜீவ் காந்தியின் நினைவு தினம்: உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை

ராஜீவ் காந்தியின் நினைவு தினம்: உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை

உறுதிமொழி எடுத்துக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்

ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரை உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

விருதுநகரில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு தினத்தை முன்னிட்டு தேசபந்து மைதானத்தில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது .

இந்நிகழ்வில் சிவகாசி எம்எல்ஏ அசோகன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி,மாநில பொதுக்குழு உறுப்பினரும், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவருமான கிருஷ்ணமூர்த்தி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.. அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், புதிதாக ஆர் எஸ் எஸ் எல் இணைந்தவர்கள் தான் அதற்கு அதீத விசுவாசத்தை காட்டுவார்கள்,

அதே போல் டிடிவி தினகரனும் அதித விசுவாசத்தை காட்டுவதாகவும் எதிர்க்கட்சியினர் எந்த ஒரு இடத்திலேயும் சிறுபான்மையினரையோ,இஸ்லாமியர்களைப் பற்றி குறை கூறவில்லை எனவும் இது குறித்து பேசுவது மோடியும் அமித்ஷா மட்டுமேஎனவும், டிடிவி தினகரன் ஆர் எஸ் எஸ் இன் புதிய விசுவாசியாக மாறி உள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் பெயரை வைத்துக்கொண்டு அவர் இது போல் பேசுவதற்கு பதிலாக தனது கட்சியை பிஜேபியுடன் இணைத்து விடலாம் எனவும் தெரிவித்தார் மேலும் பேசிய எம்பி மாணிக்கம் தாகூர் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் காங்கிரஸ் கட்சி தோளோடு தோல் நிற்கும் எனவும்,

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான பொய் குற்றச்சாட்டும் மற்றும் பொய் வழக்கிற்கு எதிராக போராடுவதற்கு இந்தியா கூட்டணி கட்சி சார்ந்த தலைவர்கள் துணை நிற்பார்கள் எனவும் ஜூன் நான்காம் தேதி அமையும் இந்தியா கூட்டணி ஆட்சி கெஜ்ரிவால் மீதான பொய் வழக்குகளை முடிவுக்கு கொண்டு வரும் எனவும் மேலும் இந்தியாவுடைய மிக முக்கியமான பிரச்சினையாக இருப்பது போதைப் பொருள் பிரச்சனை போதை பொருள் பிரச்சனையில் மோடி அரசு மெத்தனமாக இருப்பதாகவும்,

போதைப் பொருள் விற்பவர்கள் மற்றும் கடத்துவர்கள் மீது கடுமையான தண்டனைகள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனவும் திரைத்துறையில் உள்ளவர்கள் கொக்கைன் போன்ற போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் இது காவல்துறையின் முக்கியமான கடமை எனவும் கூறினார்

Tags

Next Story