தர்மபுரியில் ராஜிவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
ராஜூவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
தர்மபுரி மாவட்ட ஐஎன்டியூசி தொழிற்சங்கம் மற்றும் மகிளா காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 33வது நினைவு தினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு நேற்று மாலை அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மோகன் தலைமை வைத்து ராஜிவ்காந்தி உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து மகிளா காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் காளியம்மாள் முன்னிலையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொதுசெயலாளர் முத்து, டிஎன்எஸ்டிசி தலைவர் மணிமொழி. பொதுசெயலாளர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஐஎன்டியூசி காளியப்பன், விநாயகம், குமரவேல். சம்பத்குமார், மாதேஸ்வான். தமிழ்வாணன், ராதாகிருஷ்ணன், விவசாய பிரிவு மணிகண்ட ன், சிறுபான்மை பிரிவு முபாரக், முருகலாசன். விஜயா, பூங்கொடி, மாதம்மாள். தனலெட்சுமி,வனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.