நீதிமன்ற அனுமதியின்றி ரேக்ளா குதிரை பந்தயம்
ரேக்ளா குதிரை
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பொங்கல் விழாவையொட்டி ரேக்ளா குதிரை பந்தயம் போட்டிகள் நடைபெற்றது. நீதிமன்றம் அனுமதியின்றி நடைபெற்ற ரேக்ளா குதிரை பந்திய போட்டியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 40 குதிரைகள் பங்கேற்றன. இப்போட்டிகளை திருத்தணி திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் தொடங்கி வைத்தார்.
திருவாலங்காடு கூட்டு சாலையிலிருந்து கனகம்மாசத்திரம் நெடுஞ்சாலை வரை மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில் பெரிய குதிரைகள் 16 கி.மீ, சிறிய குதிரைகள் 14 கி.மீ. புதிய குதிரைகள் 12 க. மீ, தூரத்திற்கு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளை கண்டு ரசிக்க ஏராளமான இளைஞர்கள், கிராமமக்கள் சாலைக்கு இருபுறமும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அப்போது குதிரைகள் வேகமாக சென்றுக் கொண்டிருந்த போது சாலைக்கு இடையில் நடந்துச் சென்ற இருவர் மீது குதிரைகள் முட்டி மோதியதில் கீழே விழுந்து காயமடைந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. முடிவில் வெற்றி பெற்ற குதிரைகளின் உரிமையாளர்களுக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கப்பட்டது.