சுரண்டையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பேரணி

சுரண்டையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பேரணி

இந்தியா கூட்டணியினர் பேரணி 

சுரண்டையில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து இந்தியா கூட்டணி கட்சியினர் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டையில் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் ராணிஸ்ரீ குமாருக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுரண்டை நகர திமுக பொறுப்பாளர் கணேசன் தலைமை வகித்தார். மதிமுக மாநில சொத்து பாதுகாப்புக் குழு தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story