உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாபெரும் பேரணி
பேரணி
உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாபெரும் பேரணி நடைபெற்றது.
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக நேற்று உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாபெரும் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாஃபர் சித்திக் மாணவர்களுக்கு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துரை வழங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பேராசிரியர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் மாணிக்கவசுகி முன்னிலை வகித்தார், முனைவர் வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். முனைவர் ஜெகன் அண்டோ திலக் நன்றி கூறினார். பேரணிக்கான ஏற்பாடுகளை முனைவர் ஜோதி பிரியா மற்றும் பேராசிரியர் அஷ்வந்த் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story