உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பேரணி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பேரணி

பேரணி 

திருவள்ளூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம்-2024 முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி‌ நடைபெற்றது.

இதனை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் கொடி அசைத்துதுவங்கி வைத்தனர். இந்தப் பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் காமராஜர் சிலை வரை நடைபெற்றது.

ஒவ்வொரு வருடமும் ஜூன் 5 ஆம் நாள் உலக சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் நில மீட்டெடுப்பு. பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியைத் தாங்கும் திறன்" என்ற மையக்கருத்தில் உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் பல்வேறு சுற்றுச் சூழல் சார்ந்த பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்களை உள்ளடக்கிய பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5 மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் பேருந்து நிலையம் மற்றும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய இடங்களில் மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இதன் முலம் 50,000 த்திற்கும் மேற்பட்ட மஞ்சப்பைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பின்னர் வனத்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம்-2024 முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பூங்காவில் மரம் நடும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

Tags

Next Story