ஓசூர் மாணவியின் ராமர் பக்தி பாடல் - தமிழிசை சௌந்தர்ராஜன் வெளியீடு

ஓசூர் மாணவி பாடிய ராமர் பக்தி பாடலை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வெளியிட்டு மாணவியை வெகுவாக பாராட்டினார்.
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீராமர் திருக்கோயிலில் நேற்று ஜனவரி 22ஆம் தேதி பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இராமரை வழிபட்டு சென்றனர். இதனிடையே அயோத்தி ராமர் கோயில் சிலை நிர்மாணத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த பள்ளி மாணவி மஹன்யா என்பவர் ஸ்ரீபகவான் ராமன் மீது வைத்துள்ள பக்தியால் பாடல் ஒன்றை உருவாக்கி பாடியுள்ளார். இந்த ராமர் பக்தி பாடலை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று வெளியிட்டார். புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது தலைமை செயலாளர் ராஜுவ் வர்மா, மாணவி மஹன்யா மற்றும் அவரது பெற்றோர் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது அங்குள்ள டிவியில் மாணவியின் ராமர் பாடலை கேட்டு மகிழ்ந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாளமிட்டு பாடலை ரசித்தார் அதன்பின் மாணவியை வெகுவாக பாராட்டினார்.

Tags

Next Story