ராமர் கோவில் கும்பாபிஷேக விழா: பக்தர்கள் அழைப்பிதழ் வழங்கினர்.

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா பொது மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கிய பக்தர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தர்மராஜா கோவில் பகுதியில் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ரட்சதையுடன் ஊர்வலமாக சென்று ராமர், லீலா புகைப்படம் மற்றும் அழைப்பிதழ் வழங்கி அயோத்திக்கு அழைப்பு விடுத்தனர்.

அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 22- ம் தேதி நடக்கிறது. நாடு தழுவிய அளவில் கும்பாபிஷேக விழாவை வெகு விமரிசையாக கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். கும்பாபிஷேக நிகழ்ச்சி விபரங்களை கிராமங்கள் வரை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு செல்வதோடு, அயோத்திக்கு வாருங்கள் என்று மக்களை நேரில் அழைத்தனர்.

இதற்காக அயோத்தியில் வைத்து பூஜிக்கப்பட்ட 100 கிலோ அட்சதை, ஊத்தங்கரை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அட்சதையை அனைத்து பஞ்., அனுப்பும் நிகழ்ச்சி ஊத்தங்கரை தர்மராஜா கோவிலில் நடந்தது. ஒவ்வொரு கிராமத்தில் உள்ள இந்துக்கள் வீடு வீடாக நேரில் சென்று விநியோகம் செய்ய உள்ளனர். அட்சதையுடன் ராமர், லீலா புகைப்படம் மற்றும் அழைப்பிதழ் ஆகியவற்றையும் வழங்கி அன்றைய தினம் அனைத்து வோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட வேண்டும் என தெரிவித்தனர்.

இதில், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் திருமால் முருகன், ஆர்.பி.எஸ்., பள்ளி நிறுவனர் பொன்னுசாமி, மாநில இணைச்செயலாளர் விஷ்வ ஹிந்து பரிஷத் விஷ்ணுகுமார், மாவட்ட செயலாளர் பாலு, மாவட்ட இணை செயலாளர் ஜெகதீசன், பஜ்ரங்கல் ஒன்றிய அமைப்பாளர் ஆசை குமார், பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் சிவா, மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், முன்னாள் ஒன்றிய பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story