கோதண்டராமர் சாமி கோவிலில் ராமர்-சீதை கல்யாண உற்சவம்
ராமர்- சீதா கல்யாண உற்சவம்
சேலம் அருகே அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள கோதண்டராமர்சாமி கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு ஆண்டு தோறும் ராமர், சீதைக்கு கல்யாண உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இதையடுத்து நேற்று காலை 7 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் செய்து வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. தொடர்ந்து உற்சவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து காலை 10 மணி முதல் 12 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ராமர், சீதை தங்க கவச சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திருமண சடங்குகளை நடத்தி ராமர்-சீதைக்கு மாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் தங்க கவசம் அலங்காரத்திலும், திருக்கல்யாண கோலத்திலும் ரதவீதியில் நடைபெற்றது.