ராசிபுரத்தில் ராமர் சீதை திருக்கல்யாணம் உற்சவம்

ராசிபுரத்தில் ராமர் சீதை திருக்கல்யாணம் உற்சவம்
திருகல்யாண உற்சவம்
ராசிபுரத்தில் ராமநவமி கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக ராமர் சீதை திருக்கல்யாணம் உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ராமநவமி முன்னிட்டு தொடர்ந்து பல்வேறு ராமர் கோவில்களில் தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தொடர்ந்து பத்து நாட்களாக பஜனை பாடல்கள் கோலாட்டம் போன்றவை ராசிபுரம் நாயுடுகள் பஜனை மடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக ராமர் சீதை திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக பெண்கள் சீர்வரிசை தட்டுக்களுடன் ஊர்வலமாக வந்து ராமர் மடத்தில் உம்மி அடித்து ராமர் சீதைக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் சிறப்பாக நடத்தி சீர்வரிசை தட்டுக்கள் வைத்து சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அர்ச்சனை தூவி ராமர் சீதை கல்யாணம் பஜனை பாடல்கள் பக்தி பாடல்கள் பாடி பரவசத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு திருக்கல்யாண உற்சவத்தை கண்டு ரசித்து வணங்கி சென்றனர்.

தொடர்ந்து பெண்கள் ராமர் சீதைக்கு ஆரத்தி எடுத்து பாட்டுக்கள் பாடி உற்சாகமாக ராமநவமி விழாவினை கொண்டாடி மகிழ்ந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags

Next Story