பெரம்பலூரில் சிறப்பு தொழுகையுடன் ரமலான் பண்டிகை

பெரம்பலூரில் சிறப்பு தொழுகையுடன் ரமலான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாட்டப்பட்டது.

முஸ்லிம் மக்கள் ஆண்டுதோறும் ரமலான் பண்டிகை முன்னிட்டு, நோன்பிருந்து சிறப்பு தொழுகையுடன் பண்டிகை கடைப்பிடிப்பது வழக்கம், அதேபோல் இந்தாண்டு மார்ச் 11 ஆம் தேதி முதல் நோன்பு தொடங்கி, காலை முதல் மாலை வரை உணவு தண்ணீர் இன்றி நோன்பு , கடைப்பிடிக்கப்பட்டு 30 நாள் கழித்து இந்தாண்டுக்கான ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் 11 ஆம் தேதி இன்று நடைபெறுகிறது.

அதற்கான சிறப்பு , தொழுகை பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மதரஸா பள்ளிவாசல் சாலையில் உள்ள மெளலான மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது, சிறப்பு கூட்டு தொழுகை முடிந்து ஒருவருக் கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதனைதொடர்ந்து புத்தாடை உடுத்தி பிடித்த உணவை சமைத்து அணைவருக்கும் கொடுத்து உண்டு மகிழ்ந்தனர்.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், 4 ரோடு, துறைமங்களம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று, ரம்ஜான் பண்டிகை கடைபிடிக்கப்பட்டது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு ரமலான் தொழுகையை கடைபிடித்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்கள்.

Tags

Next Story