தூத்துக்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை

தூத்துக்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை

சிறப்பு தொழுகை 

தூத்துக்குடி மாவட்டத்தில் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஈத்கா தோட்டத்தில் உலக அமைதி, சமாதானம் உடல், மன ஆரோக்கியம் பேரிடர்களில் இருந்து மக்களை காக்க வேண்டும் என சிறப்பு தொழுகை நடைபெற்றது சிறப்பு தொழுகை தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் இமாம் அப்துல் ஆலிம் தலைமையில் நடைபெற்றது.

இதில் அரசு காஜி முஜிபுர் ரஹ்மான், ஜாமியா பள்ளிவாசல் இமாம் சதக்கத்துல்லா ஆகியோர் சிறப்பு துவா ஓதினர். இதில், ஆயிரகணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொழுகைக்குப் பின்பு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். இதுபோல் ரோச் பூங்கா, திரேஸ்புரம், ரஹமத்துல்லா நகர், ஜெயிலாணி தெரு, புதுத்தெரு, முத்தம்மாள் காலனி, ஜாகிர் உசேன் நகர் பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் புத்தாடைகள் அணிந்து வந்த முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக் கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், காயல்பட்டினம், கோவில்பட்டி உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.

Tags

Next Story