திண்டிவனத்தில் வாக்களித்த பாமக நிறுவனர் ராமதாஸ்
வாக்களித்த ராமதாஸ்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மரகதாம்பிகை அரசு பள்ளி வாக்கு மையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக கடமையான தனது வாக்குபதிவினை துனைவியார் சரஸ்வதி அம்மையாருடன் இணைந்து வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.
அதனை தொடர்ந்து பேட்டியளித்த பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 40 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுவதை தேர்தல் என்று சொல்வதை விட மெளனபுரட்சி நடைபெற்று கொண்டிருப்பதாகவும், மக்கள் மாற்றத்தை விரும்புவதால்,
புதுச்சேரி தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவார்கள் என்றும் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி அமர்வார் என கூறினார். புதுச்சேரி தமிழக மக்கள் மோடியை விரும்புவதாகவும், இந்தியாவிற்கும், தமிழகத்திற்கு புதுச்சேரிக்கு நல்ல முன்னேற்றத்தை கொண்டு வர மோடி செயல்படுவார் என்ற நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்து கொண்டிருப்பதாகவும், நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்து கொண்டிருக்கிற மக்களுக்கு பாராட்டினையும் நன்றியினை தெரிவித்து கொள்வதாகவும்,
மாற்றம் நிச்சயமாக வரும் நாடு செழிக்க வேண்டும் நல்ல மழை பெய்ய வேண்டும் என்றும் மக்கள் சமத்துவமாகவும், சகோதரத்துவமாக வாழவும் ஒரு தாய் மக்களாக வாழ இந்த தேர்தல் வெற்றி பெரிதும் உதவும் எனவும், தேர்தல் தனக்கு வந்த தகவல் படி நியாமாக நடைபெறுவதாக கூறினார். வாக்காளர்களுக்கு பணம்
வழங்கப்படுவதாக குறித்த கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ் காசேதான் கடவுளடா என அது கடவுளுக்கும் தெரியுமடா என்ற பாடல் வரிகளை குறிப்பிட்டு புறப்பட்டு சென்றார்.