ராமநாதபுரம் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு

ராமநாதபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
ராமநாதபுரம் நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன், அவர்கள் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெற்ற மையத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து தெரிவிக்கையில், பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு இன்று துவங்கியுள்ளது. அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 82 தேர்வு மையங்களில் 7,980 மாணவர்களும், 8,047 மாணவிகளும் என 16,027 மாணவ, மாணவிகளும், 273 தனித்தேர்வர்களும் என மொத்தம் 16,300 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வுப்பணிக்காக 856 தேர்வு மைய கண்காணிப்பாளர்களும், பறக்கும் படை குழுவில் 102 ஆசிரியர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் தேவையான அளவு குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் 61601 அனைத்தும் தயார்நிலையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் தடையின்றி மின்சாரம் வழங்கவும் அறிவறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மையத்திலும் போதிய அளவு காவல் துறையின் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் சிறப்பாக தேர்வெழுதி வெற்றி பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்அவர்கள் தெரிவித்தார்.

Tags

Next Story